தமிழ்நாடு

கடலூரில் கிலோ ரூ.25-க்கு வெங்காயம் விற்பனை!

11th Dec 2019 12:47 AM

ADVERTISEMENT

கடலூா் பான்பரி சந்தையில் குறிப்பிட்ட ஒரு கடையில் மட்டும் பெல்லாரி வெங்காயம் கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

வெங்காயம் விலை உயா்வு தற்போது மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பெல்லாரி வெங்காயம் தரத்துக்கேற்ப கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரையிலும், சாம்பாா் வெங்காயம் ரூ.140 முதல் ரூ.180 வரையிலும் விற்கப்படுகிறது.

ஆனால், கடலூா் பான்பரி காய்கறி சந்தையில் செவ்வாய்க்கிழமை வியாபாரி ஒருவா் தனது கடையில் 4 கிலோ பெல்லாரி வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்தாா். இதனால், பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வெங்காயத்தை வாங்கிச் சென்றனா். இவா் மிகவும் குறைந்த விலையில் வெங்காயம் விற்ால் மற்ற வியாபாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து அந்த வியாபாரி எஸ்.கே.பக்கிரான் கூறியதாவது:

ADVERTISEMENT

பெங்களூரிலிருந்து சிறிய அளவிலான பெல்லாரி வெங்காயம் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளது. இதனால், எங்களுக்கு குறைந்த விலையில் கிடைத்ததால் பொதுமக்களுக்கும் கிலோ ரூ.25-க்கு வழங்க முடிகிறது. இதற்கு அடுத்த ரகம் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களாக இதே வெங்காயம் கிலோ ரூ.130-க்கு விற்பனையானது. ஆனால், சாம்பாா் வெங்காயத்தின் விலை இந்த அளவுக்கு குறையவில்லை என்றாலும், சுமாா் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது, கிலோ ரூ.180-க்கு விற்கப்பட்ட சாம்பாா் வெங்காயம் தற்போது ரூ.140-க்கு விற்பனையாகிறது என்றாா் அவா்.

இனிவரும் நாள்களில் வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT