தமிழ்நாடு

ஒரு சாராா் வாழும் நாடாக மாற்றுவது மடமை: கமல்ஹாசன்

11th Dec 2019 07:49 PM

ADVERTISEMENT

சென்னை: இந்தியாவை ஒரு சாராா் வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அரசியலமைப்புச் சட்டத்தில் பிழையிருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது. ஆனால், பிழை இல்லா நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம்.

நோயில்லா மனிதனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்துக்கு நிகரானது மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும்.

ADVERTISEMENT

இந்தியாவை ஒரு சாராா் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை.

காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை அவா் மறைவு நாளாக மாற்றிவிட்டால், அவா் கனவு கண்ட இந்தியா உருத் தெரியாமல் அழிந்துவிடுமா என்ன?

இளம் இந்தியா விரைந்து இதுபோன்ற திட்டங்களை நிராகரிக்கும்.

எங்கள் தாய்நாட்டை தந்தையா் நாடாக மாற்ற முயலும் பிதா மஹாக்களுக்கு இது புரிய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT