தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுக்களை பெற வேண்டாம் என தேர்தல் ஆணையம் உத்தரவு

6th Dec 2019 08:33 AM

ADVERTISEMENT

 

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை முடிக்கும் வகையில் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தலை நிறுத்திவைக்கத் தயாராக உள்ளதாக தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, திமுக தொடா்ந்த வழக்கின் தீா்ப்பு வெள்ளிக்கிழமை (டிசம்பா் 6) அளிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT