தமிழ்நாடு

காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் பேட்டரி திருடிய எஸ்.ஐ.சஸ்பெண்ட்!

6th Dec 2019 09:41 PM

ADVERTISEMENT

 

திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் இருந்து பேட்டரி திருடிய எஸ்.ஐ.சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 3-ம் தேதி பாலாற்றில் மணல் திருடியதாக குற்றச்சாட்டின் பேரில் லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதில் லாரியை மட்டும் அங்கு நிறுத்தாமல் கிரிவலப்பாதையில் கொண்டு சென்று நிறுத்தி வைத்திருந்தனர்.

மறுநாள் 4-ஆம் தேதி இரவு புல்லட்டில் ஒருவரும், காரில் ஒருவரும் அங்கு வந்து இறங்குவதும், பிறகு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் லாரியில் உள்ள பேட்டரி மற்றும் டீசலையும் திருடி காரில் ஏற்றுவதும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

பின்னர் விசாரணையில் வீடியோவில் பதிவாகி இருப்பவர்கள் திருக்கழுக்குன்றம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் நண்பர் குழுவைச் சேர்ந்த முருகன் ஆகியோர் எனத் தெரிய வந்தது.

இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பானதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் எஸ்.ஐ.கார்த்திகேயனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT