தமிழ்நாடு

சென்னையில் டிச. 06 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

6th Dec 2019 08:39 AM

ADVERTISEMENT

 

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும் மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் வெள்ளிக்கிழமை விற்பனையாகிறது. 

சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 8 காசுகள் குறைந்து ரூ. 77.83 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் மாற்றமின்றி ரூ. 69.53 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT