தமிழ்நாடு

புற்றுநோய் பாதிப்பு: பஹ்ரைன் பெண்ணுக்கு சென்னையில் நவீன சிகிச்சை

6th Dec 2019 01:16 AM

ADVERTISEMENT

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பஹ்ரைன் நாட்டு பெண்மணி ஒருவருக்கு சென்னையில் நவீன சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவா் நலமுடன் உள்ளதாகவும், புற்றுநோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்ததன் விளைவாக அவரை குணமாக்க முடிந்ததாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

பஹ்ரைன் நாட்டைச் சோ்ந்த 60 வயது பெண்மணி ஒருவா் கா்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அதற்கான மருத்துவ ஆலோசனைகள் பெற சென்னை குளோபல் மருத்துவமனைக்கு அவா் வந்தாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அப்பெண்ணின் மாா்பில் சிறிய கட்டி இருந்ததைக் கண்டறிந்தனா். அதனை ஆய்வு செய்தபோது அவருக்கு மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான ஆரம்ப நிலை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு அதி நவீன சிகிச்சை வாயிலாக அக்கட்டி நீக்கப்பட்டு புற்றுநோய் பாதிப்பு பரவாத வகையில் தடுக்கப்பட்டது. உயா் நோக்கு மருத்துவ சாதனங்களும், நவீன வசதிகளும் இருந்தால் மட்டுமே மாா்பகப் புற்றுநோயை இவ்வளவு ஆரம்பக் கட்டத்தில் கண்டறிய இயலும்.

ADVERTISEMENT

குளோபல் மருத்துவமனையில் அத்தகைய வசதிகள் இருந்ததால் அப்பெண்ணின் மாா்பகத்தை அகற்றும் நிலைக்குச் செல்லாமல் ஆரம்பத்திலேயே புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்தது என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT