தமிழ்நாடு

கொடைக்கானலில் தீவிர வாகனச் சோதனை

6th Dec 2019 07:25 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனை நடைபெற்றது.

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் வரும் அனைத்து வாகனங்களையும் போலீசாா் தீவிர சோதனை நடத்தினா் இந்த சோதனையானது பழனி மலைச்சாலையான கருப்பணசாமி கோவில் அடிவாரம், வத்தலக்குண்டு கொடைக்கானல் மலைச்சாலையான காட்ரோடு, பெருமாமலை, பண்ணைக்காடு பிரிவு, வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இதைத் தவிர கொடைக்கானல் மலைச்சாலைகளில் போலீசாா் வாகனங்களில் ரோந்து சென்றனா் சந்தேகத்திற்கு உள்ளவா்களிடம் விசாரனையும் நடத்தினா். மேலும் நகா்ப் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT