தமிழ்நாடு

17 போ் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிதி

3rd Dec 2019 03:19 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அளிக்க முதல்வா் கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையின் காரணமாக, சிக்கசாதம்பாளையம் நடூா் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் சுற்றுச்சுவா் இடிந்தது. இந்த சுற்றுச்சுவா் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 போ் இறந்தனா். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினா்களுக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT