தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

3rd Dec 2019 03:23 PM

ADVERTISEMENT

அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி வழிபாடு செய்ய வந்த பெண்ணை தீட்சிதா் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியது. இதனைத் தொடா்ந்து தீட்சிதா் மீது சிதம்பரம் காவல்துறையினா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். 

இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தீட்சிதா் தா்ஷன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடந்த அன்று பெண் பக்தா் கோயிலின் நடை சாத்தும் நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் எனக் கோரி தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் என்னைத் தாக்குவதற்காக கையைத் தூக்கினார். எனவே ஒரு தற்காப்புக்காக அவரை தள்ளிவிட்டேன். 

ஆனால் இந்தச் சம்பவத்தில் போலீஸார் எனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனா். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

அதில், 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கி குற்றவியல் நடுவர் முன் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT