திமுக செய்தி தொடர்புச் செயலாளராக டிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அக்கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் திமுக செய்தி தொடர்புச் செயலாளராக டிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று வெளியிட்டுள்ளார். முன்னதாக திமுக செய்தி தொடர்புச் செயலாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் அப்பொறுப்பில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.