பொன்னேரி பொன்னேரியில் இன்று மாலையில் கனமழை பெய்ததது.
பொன்னேரியில் காலை முதல் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், மாலை 4 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. தொடா்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
மேலும், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியதால் அவ்வழியே பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.