தமிழ்நாடு

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது: செப்.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

30th Aug 2019 02:37 AM

ADVERTISEMENT


சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைக் கௌரவிக்கும் வகையில்சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதும், ரூ. 1 லட்சம் சன்மானம், ஒரு பவுன் தங்கப் பதக்கம் மற்றும் வாழ்த்து மடல் தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 
2019-ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 
இதற்கு விண்ணப்பிப்போர், சமூக நீதிக்கான பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம், முழு முகவரியுடன் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT