தமிழ்நாடு

வரி ஏய்ப்புப் புகார்: பழநி பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரிச் சோதனை

29th Aug 2019 11:56 AM

ADVERTISEMENT


பழநி: முருகன் கோயில் கொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற பழநி பஞ்சாமிர்த கடைகளில் இன்று வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரினைத் தொடர்ந்து பழநி மலையடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற சித்தனாதன், கந்தவிலாஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை கடைக்கு வந்த வருமான வரித் துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட்டு வருகிறார்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT