தமிழ்நாடு

தெலங்கானா விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து: யாருக்கும் பாதிப்பில்லை!

29th Aug 2019 11:15 AM

ADVERTISEMENT


புது தில்லி: ஹைதராபாத்தில் இருந்து புது தில்லி செல்லும் தெலங்கானா விரைவு ரயிலில் இன்று பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

இன்று காலை 7.43 மணியளவில் வண்டி எண் 12723, ஹரியாணா மாநிலம் அசோட்டி ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென ரயிலில் தீப்பற்றியது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

அசோட்டி ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற சில நொடிகளில் இந்த விபத்து நேரிட்டது. இதனால் அசோட்டி - பல்லப்கார் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் நிறுத்தப்பட்டது. 

ADVERTISEMENT

தீ காரணமாக பயங்கர புகை எழுந்து தண்டவாளப் பகுதிகளை சூழ்ந்து கொண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. 

ரயிலின் 9வது பெட்டியில் இருந்த சக்கரத்தின் பிரேக் பகுதியில் தீப்பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
 

Photo : ANI

ADVERTISEMENT
ADVERTISEMENT