தமிழ்நாடு

பியூஸ் மானுஷ் மீது தாக்குதல்: பாஜகவினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு

29th Aug 2019 11:03 AM

ADVERTISEMENT

சேலத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாஜகவினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலத்திலுள்ள பா.ஜ.க அலுவலகத்துக்கு நேற்று சென்ற சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷை பாஜகவினர் கடுமையாகத் தாக்கினர். காவல்துறையினர் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. கடுமையான தாக்குதலுக்கு உள்ளான பியூஸ் மானுஷ் மயக்கமடைந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.க.வினர் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அதேசமயம் பாஜக.வினர் அளித்த புகாரின் பேரில் பியூஷ் மானுஷ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT