தமிழ்நாடு

H.ராஜாவை விமர்சித்த வேல்முருகனுக்கு தமிழிசை கண்டனம் 

28th Aug 2019 06:57 PM

ADVERTISEMENT

 

சென்னை: பாஜக தேசியச் செயலாளர் H.ராஜாவை விமர்சித்த தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு மாநிலத் தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்த பாஜக தேசியச் செயலாளர் H.ராஜாவை., தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் வேல்முருகனுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.   

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாடும், உலக நாடுகளும் காஷ்மீரில் கொண்டு வரப்பட்டிருக்கும் மறுசீரமைப்பை ஆதரிக்கும் சூழ்நிலையில், பிரிவினையைத் தூண்டும் வகையில் வேல்முருகன் பேசியதையும் அண்ணன் H.ராஜா அவர்களைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.வேல்முருகன் தனது வார்த்தைகளைத் திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT