சென்னை: 1,200 சதுர அடிக்குள் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு இணையதளம் வாயிலாக அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.
கட்டட அனுமதிக்கான விண்ணப்பம் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி பெற்ற மனைப்பிரிவுகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பதிவுபெற்ற கட்டடப் பொறியாளரின் உறுதிமொழி ஆவணம், வரைபடங்கள், கட்டட மனைக்கான உரிமை குறித்த ஆவணங்கள் மற்றும் உரிமை சரியாக உள்ளது என்பதற்கு நோட்டரி பப்ளிக் சான்று மற்றும் கட்டடம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்பதற்குப் பதிவு பெற்ற பொறியாளா் அல்லது வல்லுநரின் உறுதிமொழி ஆவணம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
தமிழக அரசால் நிலம் கையகப்படுத்த உத்தேசம் உள்ள மனைகளுக்கு இந்த நடைமுறையின்கீழ் அனுமதி வழங்கப்படாது. கட்டணங்களை இணையதளம் வாயிலாக வசூலித்த பின் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்த பின், இணையதளம் வழியாக டிஜிட்டல் ஒப்பத்துடன் கூடிய வரைபடம் மற்றும் அனுமதி உத்தரவு வழங்கப்படும் என்றார்.