தமிழ்நாடு

மூன்று மாவட்டங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

28th Aug 2019 02:42 AM

ADVERTISEMENT


சென்னை, கோவை, ஈரோடு  ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை (ஆக. 27) தொடங்கியது. 
இந்த இலவச நீட் பயிற்சி மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்,  ஆங்கில வழியில் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  ராஜஸ்தானைச் சேர்ந்த ஈடூஷ் இந்தியா என்ற பயிற்சி நிறுவனத்துடன், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க உள்ளனர். 
ஏற்கெனவே, சென்னையில் 4 மையங்களில் சிறுபான்மை மாணவர்களுக்கு, மத்திய அரசின் சிறுபான்மை நலத் துறை மூலம் வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் மற்றும் ஜேஇஇ ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. 
தமிழகம் முழுவதும் உள்ள 412 இலவச நீட் பயிற்சி மையங்களில் விரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 
 இதுதொடர்பாக சென்னை எம்ஜிஆர்நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநர் சுகன்யா,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன்,  பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT