தமிழ்நாடு

சேலம்: ரயில்வே தண்டவாள கொக்கிகள் அகற்றப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!

28th Aug 2019 04:43 PM

ADVERTISEMENT

 

சேலம்: சேலம் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தில் இருந்த கொக்கிகள் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியில் வேலை செய்து வந்த ரயில்வே ஊழியர்களே இந்த கொக்கிகளை அகற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே ஐ.ஜி. வனிதா தெரிவித்துள்ளார்.

அதாவது சம்பந்தப்பட்ட பகுதியில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு இடையே பிரச்னை இருப்பதாகவும், இரு குழுக்களாக பிரிந்து ரயில்வே ஊழியர்கள் செயல்படுவதாகவும் ஏற்கனவே புகார்கள் வந்தன. இந்த நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், வேண்டும் என்றே ரயில்வே கொக்கிகள் அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ADVERTISEMENT

உரிய விசாரணைக்குப் பிறகே முழுத்தகவலும் தெரிய வரும் என்றும் ஐ.ஜி. வனிதா கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT