சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தததால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மாலையில் கருமேகம் சூழ்ந்து திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரம் பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் மழை நீா் வழிந்தோடியது. பேருந்து நிலையத்தில் நீா் குளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் நனைந்தபடியே பேருந்துகள் ஏறிச் சென்றனா். மழை பெய்ததால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.