தமிழ்நாடு

கீழடி அகழாய்வில் மழைநீர் செல்லும் வடிகால் கண்டுபிடிப்பு

28th Aug 2019 12:54 AM

ADVERTISEMENT


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த வடிகால் சுவர் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
கீழடியில் 2015-ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இதனைப் பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழைமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3ஆம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. 
இதையடுத்து, தமிழக தொல்லியல்துறை சார்பில் 4-ஆம் கட்ட அகழாய்வைத் தொடர்ந்து, 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு, தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை தோண்டப்பட்ட 30 குழிகளில் 700-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,  நீதி என்பவரது நிலத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து  வடிகால் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் செல்ல தமிழர்கள் வடிகால் வசதி ஏற்படுத்தியிருந்தது தெரிய வந்துள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT