தமிழ்நாடு

4-ஆம் கட்டமாக  58 கூட்டுறவு  சங்கங்களுக்குத் தேர்தல்

27th Aug 2019 01:41 AM

ADVERTISEMENT


நான்காம் கட்டமாக தமிழகத்தில் 58 கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூட்டுறவுத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இப்போது நான்காம் கட்டமாக மாநில தலைமை கூட்டுறவு வங்கி, கூட்டுறவு இணையம், 26 மாவட்ட கூட்டுறவு அச்சகங்கள் என மொத்தம் 58 சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இந்தச் சங்கங்களில் உள்ள 1,218 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அவற்றில் 348 பெண்களுக்கும், 232 இடங்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான வேட்புமனுதாக்கல் வரும் 9-ஆம் தேதியும், வேட்புமனு பரிசீலனை வரும் 11-ஆம் தேதியும் நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 12-ஆம் தேதி வெளியிடப்படும். போட்டியிருந்தால் வரும் 16-ஆம் தேதியன்று வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வரும் 17-ஆம் தேதியன்றும் அறிவிக்கப்படும்  என்று தனது அறிவிப்பில் மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT