தமிழ்நாடு

காலமானார் எல். புவனேஸ்வரி

27th Aug 2019 02:35 AM

ADVERTISEMENT


வேலூர், காட்பாடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற புள்ளியியல் துறை அலுவலர் மறைந்த டி. லீலாகிருஷ்ணனின் மனைவி எல். புவனேஸ்வரி அம்மாள் (78) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) காலமானார். 
காட்பாடி, காந்திநகர் விரிவு, நெ. 482, கம்பர் தெருவில் வசித்து வந்த இவர்,  உடல்நலக் குறைவு காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார். இவரது உடல் தகனம், விருதம்பட்டு பாலாற்றங்கரையில் செவ்வாய்க்கிழமை  காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. 
இவருக்கு, தினமணி நாகைப் பதிப்பில் செய்தி - புகைப்படக்காரராகப் பணியாற்றும் எல். அனந்தராமன் உள்ளிட்ட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தொடர்பு எண்:  97881 14111.

ADVERTISEMENT
ADVERTISEMENT