சென்னையில் நாளை முதல் மின்கலப் பேருந்து முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

சென்னையில் வரும் திங்கள்கிழமை (ஆக. 26) முதல் மின்கலப் பேருந்து இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்ட முறையில் இயக்கப்படும் இந்தப் பேருந்தின் இயக்கத்தை
சென்னையில் நாளை முதல் மின்கலப் பேருந்து முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

சென்னையில் வரும் திங்கள்கிழமை (ஆக. 26) முதல் மின்கலப் பேருந்து இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்ட முறையில் இயக்கப்படும் இந்தப் பேருந்தின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
 பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தும்
 நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. போக்குவரத்து கழகங்களை மறுகட்டமைப்பின் மூலம் நவீனமயமாக்கல் திட்டத்தின் வழியாக வரும் ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகளும், 12 ஆயிரம் பி.எஸ்.,-4 வகை பேருந்துகளும்
 படிப்படியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 முதல்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் வாங்க ஜெர்மனி நாட்டின் கே.எப்.டபிள்யூ நிறுவனம் நிதியுதவி அளிக்க உள்ளது. இதில் 80 பேருந்துகள் சென்னையில், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன.
 முதல்படி: தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதன் முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் இரண்டு பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும் என்று சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த இரண்டு பேருந்துகளையும் கொள்முதல் செய்து அவற்றை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில், இரண்டு புதிய மின்சார பேருந்துகளில் ஒரு பேருந்து தயாராகி உள்ளது. இந்தப் பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவனம் வடிவமைத்துத் தயாரித்துள்ளது. இந்தப் பேருந்தானது சென்னை நகரில் திங்கள்கிழமை முதல் இயக்கப்பட உள்ளது.
 முதல்வர் துவக்கி வைக்கிறார்: மின்சாரப் பேருந்தின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை துவக்கி வைக்கவுள்ளார்.
 இதற்காக புத்தம் புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்சாரப் பேருந்தானது ஞாயிற்றுக்கிழமை இரவு தலைமைச் செயலக வளாகத்துக்குக் கொண்டு வரப்பட உள்ளது. இந்தப் பேருந்தை முதல்வர் துவக்கி வைத்ததும் அது பொது மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது. சோதனை ஓட்ட முறையில் அது இயக்கப்படும். பின்னர் அதற்கான கட்டண விகித முறைகள் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com