அவிநாசியில் விநியோகிக்கப்படாமல் தெருவில் வீசி எறியப்பட்ட தபால்கள்

அவிநாசியில் விநியோகிக்கப்படாமல் தெருவில் வீசி எறியப்பட்டுக் கிடந்த முக்கிய தபால்கள், ஆவணங்களைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவிநாசியில் விநியோகிக்கப்படாமல் தெருவில் வீசி எறியப்பட்ட தபால்கள்

அவிநாசியில் விநியோகிக்கப்படாமல் தெருவில் வீசி எறியப்பட்டுக் கிடந்த முக்கிய தபால்கள், ஆவணங்களைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட செல்லாண்டியம்மன் கோயில் வீதியில் சாலையில் சனிக்கிழமை ஒரு துணிப் பை கிடந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு விநியோகிக்க வேண்டிய காப்பீட்டு நிறுவனத் தபால்கள், வங்கிகளின் சேமிப்பு கணக்குப் புத்தகம், வங்கிக் காசோலைகள், ஆதார் அட்டை, தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை, பல்கலைக்கழக சான்றுகள் என ஏராளமான தபால்கள், முக்கிய ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது. இதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தத் தபால்கள் 2018ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் அவிநாசி பகுதிக்கு உள்பட்ட கருணைப்பாளையம், வேலாயுதம்பாளையம், கச்சேரி வீதி உள்ளிட்ட இடங்களில் விநியோகிக்கப்பட வேண்டியவை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தபால்கள் அவிநாசி அவிநாசி தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

ஏற்கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன் அவிநாசி பழைய பேருந்து நிலைய வணிக வளாகக் கட்டடம் அருகே இதேபோல விநியோகிக்கப்படாமல் வீசி எறியப்பட்ட தபால்கள் கண்டுபிடிக்கப்பட்டு தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுவரையிலும் அதன் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை. தற்போதும் தெருவில் கிடந்த தபால்களை மீட்டு ஒப்படைத்துள்ளோம். இவையனைத்தும் முக்கியமான தபால்கள். இவை உரிய நேரத்தில் சம்மந்தப்பட்டவருக்கு கிடைக்காமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இதை வீசிச் சென்றவர் யார் என்பது குறித்து தபால் துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com