ரத்த அழுத்தம்: 46 சதவீதத்தினருக்கு விழிப்புணர்வு இல்லை

தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களில் 46 சதவீதம் பேர் அதுகுறித்த புரிதலோ, விழிப்புணர்வோ இல்லை என்று ஆய்வுத்
ரத்த அழுத்தம்: 46 சதவீதத்தினருக்கு விழிப்புணர்வு இல்லை


தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களில் 46 சதவீதம் பேர் அதுகுறித்த புரிதலோ, விழிப்புணர்வோ இல்லை என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான ஆய்வினை இந்தியா ஹார்ட் ஸ்டடி அமைப்பும், ஏரிஸ் லைஃப் சயின்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து அண்மையில் நடத்தின.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் கடந்த 9 மாதங்களாக அந்த ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 18,918 பேரின் ரத்த அழுத்தத்தை ஒரு வார காலம் மருத்துவர்கள் பரிசோதித்து ஆய்வு செய்தனர். அதன் முடிவுகள், சென்னையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. அதில் பங்கேற்ற முதுநிலை இதய மருத்துவர்கள் டாக்டர் எஸ்.சண்முகசுந்தரம், டாக்டர்  என். சிவகடாட்சம், சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் கூறியதாவது:
சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா விளங்கி வருகிறது. அதேபோன்று, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களும் நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
ஆனால், சர்க்கரை நோய்க்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ரத்த அழுத்த குறைபாடுகளுக்கு பலர் அளிப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. 130 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் ஏறத்தாழ 70 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு ரத்த அழுத்த பிரச்னைகள் உள்ளன.
அதை முறையாகக் கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ளாததன் காரணமாகவே அவர்களில் பெரும்பாலானோர் நோயாளிகளாக மாறுகின்றனர். ஊரகப் பகுதிகளில் உள்ள 25 சதவீதம் பேருக்கும், நகர்ப்புற பகுதிகளில் உள்ள33 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. ஆனால், அவர்களில் மிகக் குறைவானவர்களே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். 
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. நேரடியாக மருத்துவமனைக்கு வந்து ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு பதிலாக அதற்கான மருத்துவச் சாதனங்களை வாங்கி வீட்டிலிருந்தே அவ்வப்போது ரத்த அழுத்த பரிசோதனைகளை மேற்கொண்டால், நோய் வருமுன் தற்காத்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், நெதர்லாந்தைச் சேர்ந்த ரத்த நாள ஆய்வு மைய நிர்வாகி டாக்டர் வில்லியம் பெர்பெக், ஏரிஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் தலைவர் விரஜ் சுவர்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com