மோட்டார் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

மோட்டார் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில் உகந்த சூழலை அரசு உருவாக்கும் என தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில் உகந்த சூழலை அரசு உருவாக்கும் என தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வெள்ளிக்கிழமை மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தை பொறுத்தவரை வாகனச் சுற்றுச்சூழல் தரம்  பி 5- இல் இருந்து பி 6 -க்கு தரம் உயர்த்தப்படும். வாகனத்துறையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்குவதை குறைத்துள்ளது. 
மேலும், தேசிய அளவில் 27 பெருநகரங்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. 
இதனால் வாகன விற்பனை குறைந்துள்ளது. வாகன உற்பத்தித் துறையினர் செஸ் மற்றும்  ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இது தொடர்பாக முதல்வர் ஆலோசனையின்படி கூட்டம் நடத்தப்பட்டு பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்காத வகையில்  அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com