வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

பயங்கரவாதிகளுடன் தொடர்பா? கோவையில் மூவர் கைது

DIN | Published: 24th August 2019 06:50 PM
கோப்புப்படம்


தமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கோவையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) முக்கியமான ஓர் எச்சரிக்கை தகவலை தெரிவித்தது. அதில் இலங்கையில் இருந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி, இலங்கையைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பயங்கரவாதிகள் கடல் வழியாக கள்ளப்படகு மூலம் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும், லஷ்கர் - இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவர்கள் கோயம்புத்தூரில் தற்போது பதுங்கியிருப்பதாகவும் அந்த தகவலில் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் இந்துக்கள் போல நெற்றியில் திருநீறு, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் பொது இடங்களில் நடமாடக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் ஊடுருவியதாக கூறப்படும் 6 பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை போலீஸார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : CBE alert Coimbatore Alert Terrorist from SL in Cbe Police on high alert கோவை பயங்கரவாதிகள் இருவர் கைது உளவுத் துறை எச்சரிக்கை பலத்த பாதுகாப்பு Two detained in Coimbatore

More from the section

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து திமுக குரல் கொடுக்கும்: சுப்புலட்சுமி ஜெகதீசன்
​மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன: ஜவாஹிருல்லா 
கண்டுபிடிப்பைக் கைவிட வலியுறுத்தி ஆராய்ச்சியாளருக்கு கொலை மிரட்டல்
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அரசு முதன்மைச் செயலருமான கே.கோபால்