"பசுமைப் பட்டாசு தயாரிப்பு சாத்தியம் என்பதால் அத்தொழிலுக்கான தடை நீங்கும்': அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி

பேரியம் நைட்ரேட் அளவை குறைத்து அதனுடன் மாற்றுப் பொருள் சேர்த்து பசுமைப் பட்டாசு தயாரிக்கலாம் என்பதால் அத்தொழிலுக்கான தடை நீங்கும் என அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
"பசுமைப் பட்டாசு தயாரிப்பு சாத்தியம் என்பதால் அத்தொழிலுக்கான தடை நீங்கும்': அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி

பேரியம் நைட்ரேட் அளவை குறைத்து அதனுடன் மாற்றுப் பொருள் சேர்த்து பசுமைப் பட்டாசு தயாரிக்கலாம் என்பதால் அத்தொழிலுக்கான தடை நீங்கும் என அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
 விருதுநகர் அருகே தனியார் கல்லூரியில் பசுமைப் பட்டாசு தயாரிப்பு குறித்த நாக்பூர் நீரி அமைப்பின் சோதனை மற்றும் விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நீரி அமைப்பின் இயக்குநர் ராகேஷ்குமார், தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில், நீரி அமைப்பின் விஞ்ஞானிகள் முன்னிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: 
பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பேரியம் நைட்ரேட் அளவை குறைத்து, அதனுடன் மாற்றுப் பொருள் சேர்த்து மாசு குறைந்த பட்டாசுகளை தயாரிக்கலாம். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டாசு தொழில் மீண்டும் புத்துயிர் பெறும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் மூலம் நீரி அமைப்பு நல்ல முடிவை எடுத்துள்ளது. இதனால், சிவகாசி பகுதியில் உள்ள 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் மட்டுமன்றி, இந்தியாவில் உள்ள 1.50 கோடி பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்படும். தனியார் கல்லூரியில் நடைபெறும் சோதனை முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து அனைத்து உரிமம் பெற்ற பின் பட்டாசு தயாரிக்கலாம். பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் பேரியம் நைட்ரேட் 50 சதவீதம் சேர்க்க வேண்டியதிருந்தால், 20 சதவீதம் மாற்றுப் பொருள்கள் சேர்க்கும் போது பசுமைப் பட்டாசுகள் தயாரிக்க முடியும் என்ற முடிவை விஞ்ஞானிகள் ஏற்று கொண்டுள்ளனர். இதன் மூலம் பட்டாசு தொழிலுக்கான தடை நீங்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com