உடலுறுப்பு தேவைக்காக மனிதர்கள் விலை பேசுப்படுவது தடுக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அ.சண்முகசுந்தரம்

உடலுறுப்புகள் தேவைக்காக மனிதர்கள் விலை பேசப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தார். 
உடலுறுப்பு தேவைக்காக மனிதர்கள் விலை பேசுப்படுவது தடுக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அ.சண்முகசுந்தரம்

உடலுறுப்புகள் தேவைக்காக மனிதர்கள் விலை பேசப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தார். 
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுக்கள் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்புடன் இணைந்து மனித கடத்தல், கொத்தடிமை தொழில்முறையை ஒழிக்க மாவட்ட அளவிலான குழுவை (ர்ய்ங் ள்ற்ர்ல் ஸ்ரீழ்ண்ள்ண்ள்) 
அமைக்கவும், இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கம் நடத்தவும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மனித கடத்தல், கொத்தடிமை தொழில்முறை ஒழிப்புக் குழு வேலூரில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.செல்வசுந்தரி தலைமையில் இயங்கும் இக்குழுவில் வழக்குரைஞர்கள், காவல் துறை அதிகாரிகள், தொழிலாளர் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
மனித கடத்தல், கொத்தடிமை தொழில்முறை ஒழிப்புக் குழுவின் அறிமுக கருத்தரங்கம் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.செல்வசுந்தரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசியது:
தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் அதிக வருவாய் வரக்கூடிய மாநிலங்கள். அதேபோல், இங்குதான் அதிக அளவில் கொத்தடிமைத் தொழிலாளர்களும் உள்ளனர். கேரளம் கல்வியறிவில் சிறந்து விளங்கினாலும், அங்கும் கொத்தடிமைகள் உள்ளனர். கொத்தடிமைகளாக இருப்பவர்களை சட்டப்பூர்வமாக அணுகி மீட்க வேண்டும். 
தற்போதைய சூழ்நிலையில் உணவுப்பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை மாற்றத்தால் புதிய புதிய நோய்கள் உருவாகின்றன. இந்த நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடித்தாலும் அது தோல்வியில் முடியும்போது உடலுறுப்புகள் தானத்தை நாட வேண்டியுள்ளது. அதற்கு உடலுறுப்புகள் தானம் செய்பவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உடலுறுப்புகள் தானம் செய்ய யாரும் இல்லாத நேரத்தில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து உடலுறுப்புகள் பெறப்படுகின்றன. இத்தகைய செயல்களைத் தடுக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் ஆர்.கனகராஜ் வரவேற்றார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி   எ.எஸ்.ராஜா, மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ்.குணசேகர், பார் அசோசியேஷன் தலைவர் உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com