தமிழ்நாடு

சட்டத்தின் முன் அனைவரும் சமம்: ஜி.கே. வாசன்

23rd Aug 2019 02:07 AM

ADVERTISEMENT


முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது நடவடிக்கையை பொருத்தவரையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் ஜி.கே. மூப்பனாரின் பிறந்தநாள் விழா மற்றும் விவசாயிகள் தின விழா, தமாகா திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில்  திமுகவும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது மக்கள் விரும்பாத செயல்.
ப.சிதம்பரம் கைது நடவடிக்கையைப் பொருத்தவரையில், சட்டம் என்பது மேல் பதவியில் உள்ளவர்களுக்கும் பொருந்தும், சாமானிய மக்களுக்கும் பொருந்தும். நாட்டில் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.         
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது. அவற்றை மாநில அரசும் அனுமதிக்க கூடாது. 
தமிழக அரசு, நீர்ப்பாசன மேம்பாட்டிற்காக, தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு இலவச விதை நெல், உரம், பூச்சி மருந்து வழங்க வேண்டும். நெல் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் பயிர் மானியம் தெலங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவது போல தமிழக அரசும் வழங்க வேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT