போர்க்குற்றம் புரிந்தவர் இலங்கை ராணுவத் தளபதி: ராமதாஸ் கண்டனம்

போர்க்குற்றம் புரிந்தவரை இலங்கை ராணுவத் தளபதியாக நியமித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


போர்க்குற்றம் புரிந்தவரை இலங்கை ராணுவத் தளபதியாக நியமித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை ராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஷவேந்திர சில்வா 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இலங்கை இறுதிப் போரில் மிகக் கடுமையான போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அரங்கேற்றியவர் ஆவார். அவரது தலைமையிலான 58-ஆவது படையணிதான் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது. 
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில் ஷவேந்திர சில்வாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவ்வளவு மோசமான பின்னணி கொண்ட ஷவேந்திர சில்வாவை ராணுவத் தளபதியாக நியமித்திருப்பதன் மூலம், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மீதும், இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வரும் ஆர்வலர்கள் மீதும் இலங்கை அரசு கரியைப் பூசியிருக்கிறது.
 ஷவேந்திர சில்வாவை தண்டிப்பதற்குப் பதிலாக பதவி உயர்வு வழங்கி, கெளரவப்படுத்தியிருப்பதன் மூலம் இலங்கையில் இனியும்  மனித உரிமைகள் மதிக்கப்படாது என்பதை இலங்கை அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.
எனவே,  இலங்கையின் ராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை இந்தியா கண்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கைப் போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com