நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியா?

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியா?


நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
முப்படைகளுக்கும் ஒரே தளபதி என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது ஜனநாயகத்துக்கு பெரிய அடியாகும்.  அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருப்பது ஆபத்தானது. தமிழகத்தில் பால் விலை உயர்வு என்பது மக்களுக்கு பெரும் சுமையாகிவிடும். அரசுதான் மானியம் கொடுத்து, மக்களின் சுமையைத் தாங்க வேண்டும். நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து திமுகவுடன் கலந்து பேசுவோம். அங்கு போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.
முன்னதாக, சுதந்திரப் போராட்ட தியாகி சத்தியமூர்த்தி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. சத்தியமூர்த்தியின் சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், ஜி.கே.மூப்பனாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, மாநிலப் பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com