வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

ராணுவ வீரர்களுக்கு ஈஷாவில் ஹடயோக பயிற்சி

DIN | Published: 20th August 2019 01:49 AM
கோவை ஈஷா யோக மையத்தில் ஹதயோகா பயிற்சி முடித்த இந்திய ராணுவ வீரர்கள்.


கோவை ஈஷா யோக மையத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 64 பேருக்கு 14 நாள்கள் ஹடயோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
 ராணுவ வீரர்கள் உடல், மன ரீதியிலான பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வசதியாக அவர்களுக்கு ஹடயோக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட 64 அதிகாரிகள், வீரர்களுக்கான பயிற்சி வகுப்பு கடந்த 6 ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) நிறைவடைந்தது. இதில் அவர்களுக்கு அங்கமர்த்தனா, சூர்ய க்ரியா, உப-யோகா, மந்திர உச்சாடனை, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த யோக பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன.
 இவர்களில் சில வீரர்களுக்கு, ஹடயோக பயிற்சியாளர் ஆவதற்கான பிரத்யேக பயிற்சியும்  வழங்கப்பட்டது. அந்த வீரர்கள் தங்களுடைய ராணுவ முகாம்களுக்கு சென்று அங்குள்ள வீரர்களுக்கு ஹடயோகப் பயிற்சியைக் கற்றுக் கொடுக்க உள்ளனர். இதற்கு முன்பு 3 பி.எஸ்.எஃப். குழுவினருக்கும், ஒரு ராணுவ குழுவுக்கும் ஈஷாவில் 14 நாள்கள் ஹடயோக பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீஸார் விசாரணை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து திமுக குரல் கொடுக்கும்: சுப்புலட்சுமி ஜெகதீசன்
​மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன: ஜவாஹிருல்லா 
கண்டுபிடிப்பைக் கைவிட வலியுறுத்தி ஆராய்ச்சியாளருக்கு கொலை மிரட்டல்