பருவநிலை மாற்றத்தால் பாதிப்புகள்: பாமக விழிப்புணர்வு பிரசார இயக்கம்

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரசார இயக்கம் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரசார இயக்கம் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பருவநிலை மாற்றத்தால் உலகின் பிற நாடுகளை விட இந்தியா அதிகமாகப் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க  மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வு இல்லை.
பருவநிலை மாற்றத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அரிசி, கோதுமை, சோளம், சோயா ஆகிய நான்கு முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறையும். இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. உணவுப் பற்றாக்குறையும், கடுமையான உடல்நலப் பாதிப்புகளும் உருவாகும் என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பசுமைத் தாயகம் சார்பில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பிரசார இயக்கத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடங்கி வைக்க உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com