மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் பால் விலை குறைவு தான்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் பால் விலை குறைவு தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் பால் விலை குறைவு தான்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் பால் விலை குறைவு தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

சிவகாசியில் குடிமராத்துப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார் . 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்தில் எந்த முதல்வரும் படைக்காத சாதனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படைத்து வருகிறார்.   அவர் மீது கொண்ட ஆதங்கத்தினால் தான், முதல்வரின் அமெரிக்கப் பயணத்தை ஸ்டாலின் குறை கூறி வருகிறார். அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் மூலமாக இங்கு தொழில் வளத்தை மேம்படுத்தவே, முதல்வர் அமெரிக்கா செல்கிறார். 

திடீரென பெய்த மழையில் முளைத்த காளான் போன்றது கமலின் கட்சி. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருக்கும் கமல் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் அரசியலுக்கு வந்துவிடுவார். கமலின் கட்சிக்கு எந்த வித கொள்கைகளோ, கோட்பாடுகளோ கிடையாது" என்று கூறினார். 

தொடர்ந்து, ஆவின் பால் விலை உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், 'மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் பால் விலை குறைவு தான். பால் உற்பத்தியாளர்களுக்கு ஆகும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலகச் செலவு ஆகியவை கணக்கில் கொண்டு தான் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது" என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com