விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, போலீஸார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலும் நகர்ப்புறங்கள், புறநகர் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கிராமப்புறங்களிலும் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, கடந்த 10 நாள்களில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்: விக்கிரவாண்டி அருகே வடகுச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு, தனது வீட்டில் குடும்பத்தினúராடு தூங்கிய போது, நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பையில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம், மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
மயிலம் அருகே பாதிராப்புலியூர் கிராமத்தில் அரிதாஸ், அவரது உறவினர் அருணாசலம் ஆகியோரது வீடுகளில் 36 பவுன் தங்க நûககள், ரூ.10 லட்சமும், திண்டிவனம் அருகே வடசிறுவலூரில் விவசாயி தேவராஜ் வீட்டில் 20 பவுன் தங்க நûககள், ரூ.5 ஆயிரமும் பட்டப்பகலில் திருடப்பட்டன.
கண்டமங்கலம் அருகே ஆண்டியார்பாளையத்தில் விவசாயி தேவநாதன் வீட்டில் இரவு தூங்கிய போது, 10 பவுன் தங்க நûககள், ரூ.78 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இúதபோல, மயிலம் அருகே விளங்கம்பாடியில் கோயில் நிர்வாகி அரிதாஸ் வீட்டில் ரூ.1.50 லட்சம், திண்டிவனம் அருகே இûறயானூரில் ஓட்டுநர் ராமலிங்கம் வீட்டில் 5 பவுன் தங்க நûககள், ரூ.5 ஆயிரம், கள்ளக்குறிச்சி ஏர்வாய்பட்டனத்தைச் சேர்ந்த ரúமஷ் வீட்டில் 10 பவுன் தங்க நûககள், ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி நந்தினி, வீட்டில் தூங்கிய போது, அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
சென்னை கடப்úபரிûயச் சேர்ந்த சிவா (25), தனது நண்பர்களுடன் பைக்கில் புதுûவக்கு வந்த போது, கோட்டக்குப்பம் அருகே சாலையோரம் நின்றிருந்த மர்ம நபர்கள் போலி துப்பாக்கிûயக் காட்டி மிரட்டி, செல்லிடப்úபசி, ரூ. ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இவை அனைத்தும் கிராமப்புறங்களில் பகல் நேரங்களிலும், இரவு குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோதும் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள். இது போன்ற சம்பவங்கள் தற்போது தொடர்ந்து வருகின்றன.
சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பைக்கில் வரும் மர்ம நபர்கள், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்úபட்டை, கள்ளக்குறிச்சி, சின்னúசலம் போன்ற பகுதிகளிலும், அருகில் உள்ள கிராமப் பகுதிகளிலும் புகுந்து திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
போலீஸாரின் கண்காணிப்பில் தொய்வு:
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புறங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் அண்மைக்காலமாக போலீஸாரின் ரோந்து கண்காணிப்பு இல்லாததும், சிசிடிவி கேமராக்கள் போதுமான அளவில் பொருத்தப்படாததும் திருட்டில் ஈடுபடுúவாருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. பெரும்பாலான போலீஸார் காஞ்சிபுரம் காவல் பாதுகாப்புப் பணிக்கு சென்றுவிட்டதாலும், இரவு ரோந்து, சந்úதக நபர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில் தோய்வு ஏற்பட்டதாலும், பட்டப்பகலிலும் திருட்டுகள் அதிகரித்துள்ளன. திடீùரன ஒரே நாளில் வாகன சோதனை நடத்துவதையும் பல காவல் நிலைங்களைச் சேர்ந்த போலீஸார் பெயரளவில் தான் மேற்ùகாள்கின்றனர்.
திருட்டுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய குற்றப்பிரிவிலும் போலீஸார் பற்றôக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. நேரடி உதவி ஆய்வாளர்கள் இல்லாததாலும், பெரும்பாலும் தலைமைக் காவலர்கள், காவலர்கள் நிலையில் உள்ளவர்களே குற்றப் பிரிவில் பணியாற்றி வருவதாலும், திருட்டு சம்பவங்களில் தீவிரமாக செயல்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீஸாரே தெரிவிக்கின்றனர்.
விழுப்புரத்தில் டி.எஸ்.பி. திருமால் தலைமையில் செயல்படும் தனிப்படையால் ஓரளவு குற்றச் சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளன. திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்úபட்டை உள்ளிட்ட உள்கோட்டங்களிலும் தனிப்படை போலீஸார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மாவட்டத்தில் பெருகி வரும் குற்ற சம்பவங்களைத் தடுக்க 8 உள் கோட்டங்களிலும் தனி டி.எஸ்.பி. தலைமையில், குற்றப் பிரிவுகளில் அனுபவம் வாய்ந்த காவல் உதவி ஆய்வாளர்களை நியமித்து, தொடர் திருட்டுகளில் ஈடுபடுúவாûரக் கைது செய்யவும், அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.