தமிழ்நாடு

முதல்வருக்கு ராக்கி கயிறு கட்டிய தமிழிசை சௌந்தரராஜன்

16th Aug 2019 02:04 AM

ADVERTISEMENT


சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கே.கே.நகரில் நடந்த சமபந்தி விருந்து நிகழ்வின் போது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சகோதரத்துவத்தை உணர்த்தும் ராக்கி கயிறை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கட்டினார்.
சுதந்திர தினத்தை ஒட்டி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். தமிழகம் முழுவதும் 448 கோவில்களில் இந்த சமபந்தி விருந்துக்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பல்வேறு திருக்கோவில்களில் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில், சென்னை கே.கே. நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில்  நடந்த சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டார். 
இந்த சமபந்தி விருந்து நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ரக்ஷô பந்தன் தினத்தை ஒட்டி, சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் முதல்வர் பழனிசாமியின் கையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ராக்கி கயிறைக் கட்டினார்.
பிற கோயில்கள்: இதேபோன்று, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் பேரவைத் தலைவர் தனபால், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அடையாறு அனந்தபத்மநாபசுவாமி கோயிலில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, காளிகாம்பாள் கோயிலில் அமைச்சர் தங்கமணி, கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயிலில் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ  என சென்னையில் உள்ள முக்கியக் கோயில்களில் நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT