தமிழ்நாடு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு: சிபிசிஐடி அதிகாரி திடீர் மாற்றம்

16th Aug 2019 01:04 PM

ADVERTISEMENT

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த ஜூலை 23ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு தொடர்பாக திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயனை தனிப்படை போலீஸார் கடந்த ஜூலை 30ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி டிஎஸ்.பி அனில்குமார் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் பிராங்க்ளின் ரூபன் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT