தமிழ்நாடு

நடராஜர் கோயில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

16th Aug 2019 01:36 AM

ADVERTISEMENT


நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம்  நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றப்பட்டது.
சுதந்திர தினத்தையொட்டி, நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் காலை 6 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து சித்சபையில் உள்ள  சிவகாமசுந்தரி சமேத  நடராஜ மூர்த்திக்கு அர்ச்சனை, தீபாராதனை செய்தனர். பின்னர், மேள தாளங்கள் முழங்க பொது தீட்சிதர்கள் தேசியக் கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றினர். பின்னர், பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மா, பலா, சந்தனம் உள்ளிட்ட 73 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT