தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை

16th Aug 2019 10:06 PM

ADVERTISEMENT

 

சென்னை:  ஆசிரியர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

அதேவேளையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வகையான பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றத்தை தொடங்கி அதில் மாணவர்களை சேர்த்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT