சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம்: முதல்வர் பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

DIN | Published: 15th August 2019 01:33 AM


தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க உறுதியேற்போம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.  நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி, முதல்வர் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-
இந்தியத் திருநாடு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகள். சுதந்திரப் போராட்டத்தில் வீரர்கள் பலர் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தனர். அந்த வீரத் தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் சுதந்திர தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்த தியாகிகளைப் போற்றி பெருமைப்படுத்தும் வகையில், தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியன உயர்த்தி வழங்கப்பட்டது. மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களுக்கு மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. சுதந்திர தினமான இந்த இனிய நாளில் தமிழக மக்கள் அனைவரும் ஜாதி, மத, பேதங்களை களைந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து இந்திய நாட்டை வல்லரசு நாடாகவும், தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு பேச்சு
மோடியை துதிபாடி பிழைக்க நினைப்பவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறலாம்: கே.எஸ். அழகிரி அதிரடி
பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
மதியம் பெய்த தூறல் டிரெய்லர்தான்: மாலை அல்லது இரவில் இருக்கிறது மழை விருந்து!
இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர் அருண் ஜேட்லி: ராமதாஸ் இரங்கல்