வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார்: சோனியாவிற்கு அழகிரி வாழ்த்து 

வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியாவிற்கு, மாநில காங்கிரஸ் தலைவர்  அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார்: சோனியாவிற்கு அழகிரி வாழ்த்து 

சென்னை: வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியாவிற்கு, மாநில காங்கிரஸ் தலைவர்  அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மீண்டும் அன்னை சோனியா காந்தி அவர்கள்  நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நியமிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். மிகமிகச் சோதனையான காலகட்டத்தில் 1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 19 ஆண்டுகாலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்து, காங்கிரஸ் கட்சியை வலிமையுடன் வழிநடத்தியவர். இவரது தலைமையின் கீழ் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பத்தாண்டு காலம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை வழி நடத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் பெரும் துணையாக இருந்தவர்.

கடந்த காலத்தில் இவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி பல வெற்றிகளை குவித்தது. அதைப் போல, மீண்டும் அன்னை சோனியா காந்தி அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து, வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. சோதனையான நேரத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்த அன்னை சோனியா காந்தி அவர்களை லட்சோபலட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com