தமிழ்நாடு

பிளஸ் 2 வகுப்புக்கு இரண்டாம் பாக புத்தகங்கள்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

11th Aug 2019 03:23 AM

ADVERTISEMENT

பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் பாக புத்தகங்களை கால தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வியில் 13 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு நடத்தப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2-வுக்கு  நிகழ் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் பிளஸ் 2 வகுப்புக்கு இரண்டு பாகங்களாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதல் பாக புத்தகங்கள் ஜூன் இரண்டாம் வாரத்தில் வழங்கப்பட்டன. அவற்றில் உள்ள பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். 
காலாண்டு தேர்வுக்கு முன் முதல் பாகத்தின் பாடங்கள் முடிந்து விடும். அதன்பின் இரண்டாம் பாகத்தின் பாடங்கள் நடத்தப்படும்.  வரும் செப்டம்பர் முதல் இதற்கான வகுப்புகள் தொடங்கும். ஆனால் இரண்டாம் பாகத்தின் புத்தகங்கள் இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
காலாண்டு தேர்வுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இரண்டாம் பாகத்தின் புத்தகங்கள் உரிய நேரத்தில் கிடைக்குமா, பாடங்கள் நடத்துவது தாமதமாகுமா என்று தெரியாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் தவிப்பில் உள்ளனர். 
பிளஸ் 2 மாணவர்கள் "நீட்' உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அவர்களுக்குப் பாடப் புத்தகங்களை விரைந்து வழங்கினால் மட்டுமே தேர்வுகளுக்குத் தயாராக முடியும். எனவே, புத்தகங்களை விரைந்து வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ADVERTISEMENT
ADVERTISEMENT