தமிழ்நாடு

நீலகிரியில் முழு கண்காணிப்புப் பணி

11th Aug 2019 03:31 AM

ADVERTISEMENT

 

கடுமையான மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரியில் முழுமையான அளவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 

சென்னையை அடுத்த வண்டலூரில் செய்தியாளர்களுக்கு அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. பந்தலூரில் நிலச்சரிவு ஏற்பட்டு, அதைச் சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், காட்டுக்குப்பை என்ற இடத்தில் 34 பேர் வெள்ளத்தில் சிக்கி பேரிடர் மீட்புக் குழுவின் மூலமாக அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கே பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்புக் குழுவின் மூலமாக மீட்டு, கிட்டத்தட்ட 5 ஆயிரத்து 500 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவர்களின் உறவினர்களின் இல்லங்களில் தங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். 

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரடியாக அனைத்து இடங்களிலும் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். அரசுத் துறை அதிகாரிகள் அங்கே கண்காணித்து பொது மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT