தமிழ்நாடு

திருக்குறள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: வைகோ

11th Aug 2019 02:41 AM

ADVERTISEMENT

 

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை (ஆக.12) நடைபெறவுள்ள திருக்குறள் மாநாட்டில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் திருக்குறள் மாநாட்டை நடத்த உள்ளது. தமிழகத்தில் திருக்குறள் மாநாட்டை முதன்முதலில் மிகப்பெரிய அளவில் நடத்தியவர் பெரியார். அதற்கு முன்னால் ஒன்றிரண்டு மாநாடுகள் நடைபெற்றதாக இராவண காவியம் தீட்டிய புலவர் குழந்தை குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழக மக்கள் உள்ளங்களைக் கவரும் வகையில் பகுத்தறிவுப் பாசறையின் சார்பாக, திருக்குறள் மாநாடுகளைத் தொடர்ந்து நடத்தியவர் பெரியார்தான்.

ADVERTISEMENT

ஹிந்தி ஆதிக்கத்தை நிலைநாட்ட பிரதமர் நரேந்திர மோடி அரசு மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவும், தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியத்தை உயர்த்தவும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை முன்னிறுத்துவதுதான் சரியான போர் முறையாகும். தமிழர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்வது தலையாய கடமை ஆகும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT