தமிழ்நாடு

காஷ்மீர் மறுசீரமைப்பு: அமித் ஷாவுக்கு ரஜினி பாராட்டு

11th Aug 2019 11:39 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அமித் ஷா திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜாவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். 

நிகழ்சசியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீரில் அரசு எடுத்தது துணிச்சலான முடிவு. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது. நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. அமித் ஷாவும், மோடியும், கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள். 

இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். எந்நேரமும் மக்களைப் பற்றி சிந்திப்பவர் வெங்கய்ய நாயுடு. போன்றவர்கள். வெங்கய்ய நாயுடு சிறந்த ஆன்மிகவாதி, தப்பித்தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT