தமிழ்நாடு

அமராவதி அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

11th Aug 2019 03:14 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து நீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து அமராவதி பிரதானக் கால்வாய்க்கு உட்பட்ட புதிய ஆயக்கட்டு பகுதியில் உள்ள பயிர்களைக் காக்கும் வகையில் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, அமராவதி அணையில் இருந்து அமராவதி பிரதானக் கால்வாய்க்கு உட்பட்ட புதிய ஆயக்கட்டுப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் ஆக. 25-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு 570 மில்லியன் கன அடிக்கும் மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT