சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

உதகை கோடை சீசன்: இன்று முதல் தினசரி ரயிலாக மாறும் சிறப்பு மலை ரயில்

DIN | Published: 29th April 2019 02:02 AM
உதகையிலிருந்து கேத்தி வரை சனிக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயில்.

உதகை கோடை சீசனையொட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 முறை இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயில் திங்கள்கிழமை (ஏப்ரல் 29) முதல் தினசரி இயக்கப்படுகிறது. மேலும், தினமும் 3 முறை இந்த ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, திங்கள்கிழமை (ஏப்.29) முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் நேரம் விவரம் வருமாறு: உதகை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 9.40 மணிக்கு சிறப்பு மலை ரயில் புறப்பட்டு காலை 9.51 மணிக்கு லவ்டேல் ரயில் நிலையம் சென்றடையும். அங்கிருந்து 9.54 மணிக்குப் புறப்பட்டு காலை 10.10 மணிக்கு கேத்தி ரயில் நிலையம் வந்தடையும்.

அதேபோல இரண்டாவது சிறப்பு ரயில் காலை 11.30 மணிக்கு உதகையில் இருந்து புறப்பட்டு 11.41 மணிக்கு லவ்டேல் நிலையம் வரும். அங்கிருந்து 11.44 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.10 மணிக்கு கேத்தி ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் கேத்தி ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.55 மணிக்கு லவ்டேல் நிலையம் செல்லும். பின்னர் மதியம் 1.10 மணிக்கு உதகை ரயில் நிலையத்தை சென்றடையும்.

மேலும், மூன்றாவது சிறப்பு மலை ரயில் பிற்பகல் 3 மணிக்கு உதகையில் இருந்து புறப்பட்டு 3.11 மணிக்கு லவ்டேல் ரயில் நிலையத்தை சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 3.14 மணிக்குப் புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி ரயில் நிலையத்தை சென்றடையும். 

மறுமார்க்கத்தில் மாலை 4 மணிக்கு கேத்தியிலிருந்து புறப்பட்டு 4.15 மணிக்கு லவ்டேல் ரயில் நிலையத்தையும்,  மாலை 4.30 மணிக்கு உதகை ரயில் நிலையத்தையும் சென்றடையும்.

இந்த மூன்று சிறப்பு மலை ரயில்களிலும் 32 இருக்கைகளுடன் கூடிய ஒரு முதல் வகுப்பு பெட்டியும், 100 இருக்கைகளுடன் கூடிய இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்பில் பயணிக்க ரூ.400, இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படும்.

சிறப்பு மலை ரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் தெற்கு ரயில்வேயின் சார்பில் சிறப்பு பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பயணச்சீட்டு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

விவசாயத்துக்கு கடல் நீரைப் பயன்படுத்த தொழில்நுட்ப ஆராய்ச்சி: எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தல்
அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
தேசியத் திறனாய்வுத் தேர்வு: செப். 7 வரை விண்ணப்பிக்கலாம்
ஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்
ரத்த அழுத்தம்: 46 சதவீதத்தினருக்கு விழிப்புணர்வு இல்லை