புதன்கிழமை 22 மே 2019

குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

DIN | Published: 24th April 2019 12:33 AM
குற்றாலம் பேரருவியில் விழும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை இரவு மழை பெய்ததைத் தொடர்ந்து  பேரருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுந்ததால், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 

இதையடுத்து, குற்றாலம் பேரருவியில் நள்ளிரவில் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தண்ணீர்வரத்து சற்று குறைந்ததையடுத்து, குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

மேலும், பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியிலும் தண்ணீர் கொட்டியதால், அங்கும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். 

கோடைகாலத்தில் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையடுத்து, சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தேர்தல் தேவதைகள்...! தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த  புகழ்...!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி 
சேலம்: சத்திரம் என்ற இடத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை கடத்தல்
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: அமுதா உள்பட 7 பேரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
வாக்கு எண்ணிக்கைக்குத் தயார்; உடனுக்குடன் தேர்தல் முடிவுகள்: சத்யபிரதா சாஹு